செல் பிரிதல் மற்றும் மறுசுழற்சியை கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Yoshinori ohsumi

 

  • செல் பிரிதல் மற்றும் மறுசுழற்சியை கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. நோபல் பரிசு இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

 

யோஷினோரி ஒசுமி

 

  • உலகிலேயே மிக உயர்ந்த கவுரவமாக கருதப்படும் இந்த பரிசை சுவீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவர் கடந்த 1895-ம் ஆண்டு நிறுவினார். அந்தவகையில் 2016-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளை சுவீடனில் உள்ள நோபல் சபை அறிவிக்க தொடங்கி உள்ளது. இதில் முதலாவதாக மருத்துவம் அல்லது உடலியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

 

  • யோஷினோரி ஒசுமி இந்த பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மனித உடலில் செல்கள் எவ்வாறு பிரிகிறது? தனது உள்ளடக்க பொருட் களை எவ்வாறு மறுசுழற்சி செய்துகொள்கிறது? என்பதை யோஷினோரி துல்லியமாக கண்டறிந்தார்.

 

  • இதன் மூலம் புற்றுநோய், பார்கின்சன், நீரிழிவு போன்ற நோய்களுக்கான காரணம் மற்றும் அவற்றுக்கான நிவாரணம் குறித்து அறிந்து கொள்ள வசதி ஏற்பட்டு உள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக யோஷினோரி ஒசுமிக்கு நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்களின் மறுசுழற்சி இது குறித்து நோபல் பரிசு சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘செல்கள் எவ்வாறு மறுசுழற்சி செய்துகொள்கிறது? என்பதில் நமக்கு இருந்த புரிதலை ஒசுமியின் கண்டுபிடிப்பு மேலும் தெளிவுபடுத்தி உள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், ‘தன்னைத்தானே உண்ணும் மரபணுக்களால் நோய்கள் ஏற்படுகிறது.

 

  • புற்றுநோய் மற்றும் பல்வேறு நரம்பியல் நோய்களின் பல்வேறு நிலைகளில் இந்த தன்னைத்தானுண்ணல் நடவடிக்கைகள் தாக்கம் ஏற்படுத்துகிறது’ என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. உண்மையிலேயே கவுரவம் ஒசுமியின் கண்டுபிடிப்புகள் மூலம் பல்வேறு உடலியல் நடவடிக்கைகளுக்கு வழி திறந்திருப்பதாக கூறியுள்ள நோபல் சபை, செல்கள் உடைதல் பிரிவில் அவரது பணிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், பல்வேறு நோய்கள் மூலம் என்னென்ன தவறுகள் விளைகிறது? என்பதை விளக்க உதவுகிறது எனவும் தெரிவித்து உள்ளது. விஞ்ஞானி யோஷினோரி ஒசுமி ஜப்பானின் புகுவோகாவில் 1945-ம் ஆண்டு பிறந்தார். இந்த விருது மூலம் தான் உண்மையிலேயே கவுரவிக்கப்பட்டு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]