Carbon | TNPSC | TET Study Materials | கார்பன்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கார்பன்:

  • மிக முக்கிய தனிமங்களுள் கார்பனும் ஒன்றாகும். இது ஒரு தனித்தன்மை வாய்ந்த தனிமமாகும்.
  • இயற்கையில் காணப்படும் நிலக்கரி, பெட்ரோலியம், பளிங்கு கல் மற்றும் சுண்ணாம்பு கல் போன்றவற்றில் கார்பன் உள்ளது.
  • கார்பன் ஒரு அலோகம். இது ‘C’என்ற குறியீட்டால் குறிப்பிட்டப்படுகிறது.
  • கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் இணைந்து வெவ்வேறு அளவுடைய சங்கிலித் தொடர்களையும் வளையற்களையும் தோற்றுவிக்கும். கார்பனின் இந்த பண்பிற்கு கேட்டினேஷன் என்று பெயர்.  இந்த அரிய பண்பே பல மில்லியன் கார்பன் சேர்மங்கள் உருவாக காரணமாய் உள்ளது.
  • புவியின் ஒட்டுப்பகுதியில் அளவே கார்பன் உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடு உள்ளது.
  • இயற்கையில் நிலக்கரி ம்ட்டுமல்லாமல் கிராபைட் மற்றும் வைரம் என்று இருவகைகளிலும் கார்பன் காணப்படுகின்றது.
  • ஃபுல்லரீன் என்ற இன்னொரு வகை கார்பனும் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் காற்றிலிருந்து கார்பன்டைஆக்ஸைடை உறிஞ்சி கார்போஹைட்ரேட் எனப்படும் கார்பனின் சேர்மத்தை உருவாக்குகின்றன. உயிர் வாழ் இனங்கள் இத்தகைய தாவரங்களை உண்டு அவை வாழ்வதற்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன.  உயிர் வாழ் இனங்கள் வாழத் தேவைப்படும் முக்கியச் சேர்மங்களான புரதங்கள், வைட்டமின்கள், எண்ணெய் மற்றும் கொழுப்புகள் கார்பனின் மற்ற சில சேர்மங்களாகும்.
  • கார்பனுக்கு புறவேற்றுமை பண்பு காணப்படுகிறது. கார்பனின் பல்வேறு புறவேற்றுமை வடிவங்களை படிகங்கள் மற்றும் படகவடிவமற்றவை என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
  • கிராபைட்டும் வைரமும் கார்பனின் இரு படிக புறவேற்றுமை வடிவங்களாகும்.
  • நிலக்கரி, அப்புக்கரி மற்றும் விளக்குக்கரி ஆகியவை கார்பனின் பல்வேறு புறவேற்றுமை வடிவங்களை படிகங்கள் மற்றும் படிகவடிவமற்றவை என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
  • கிராபைட் என்பது கருப்பான, மென்மையான மற்றும் வழவழப்பான கார்பனாகும்.
  • இயற்கையில் காணப்படும் அனைத்து பொருள்களிலும் மிக்க கடினமானது வைரமாகும்.

கிராபைட்டின் வடிவமைப்பு:

  • கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது.  ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டள்ளது.  ஒரு அடுக்கிலுள்ள கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பு மிகவும் வலிமையானது.  ஆனால் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டவால்ஸ் விசைகளாகும்.  இந்த அடுக்கு ஒன்றின்மீது ஒன்று நழுவும் தன்மையுடையது.  இதனால் தான் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது.  இப்பண்பினால்தான் கிராபைட்டை எந்திரங்களில் உயவுப் பொருளாக பயன்படுத்துகிறோம்.
Click Here To Get More Details