கார்போஹைட்ரேட்டுகள்

கார்போஹைட்ரேட்டுகள்                                       

  • இவைகள் பல ஹைட்ராக்சி தொகுதிகளைக் கொண்ட ஆல்டிகைடுகள் அல்லது கீட்டோன்களாகும். எ.கா. சர்க்கரை, ஸ்டார்ச், இவைகள் தாவரங்களில் ஒளிச் சேர்க்கையினால் உண்டாகுபவை.

ஒற்றைச் சர்க்கரைகள்                                         

  • இவைகள் மேலும் எளிய சர்க்கரைகளாக நீராற் பகுக்கப்படமுடியாத பல ஹைட்ராக்சி ஆல்டிகைடு அல்லது கீட்டோன்கள் ஆகும்.

எ.கா. குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ்.

ஆல்டோசுகள்                                                   

  • ஆல்டிகைடு தொகுதியைக் கொண்ட கார்போஹைட்ரேட்டுகள்.

    எ.கா. குளுக்கோஸ் ( ஆல்டோ ஹெக்சோசஸ்)

கீட்டோசுகள்                                             

  • கீட்டோ தொகுதியைக் கொண்ட கார்போஹைட்ரேட்டுகள்.

                           எ.கா. ஃப்ரக்டோஸ் (கீட்டோ ஹெக்சோசஸ்)        

   ஒலிகோ சர்க்கரைகள்                                             

  • நீராற் பகுத்தலில், இரண்டு முதல் பத்து ஒற்றைச் சர்க்கரை மூலக்கூறுகளைக் கொடுக்கும் சர்க்கரைகளாகும்.

டைசாக்கரைடுகள்                                              

  • இவைகள் ஒரே வகையான அல்லது வெவ்வேறு வகையான இரண்டு ஒற்றைச் சர்க்கரை மூலக்கூறுகளை நீராற்பகுத்தலில் கொடுக்கும் சர்க்கரைகளாகும்.

.கா. சுக்ரோஸ், மால்டோஸ்.

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.