அளவிடும் கருவிகள் | tnpsc materials

Deal Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

அளவிடும் கருவிகள் அளவிடும் கருவிகளின் சிறப்பியல்புகள்

 • அளவிடும் கருவிகளின் மூன்று முக்கியப் பண்புகளைப் பற்றி ஒருவர் அறிந்திருத்தல் அவசியம்.ஆவையாவன:
  • மீச்சிற்றளவு
  • வீச்சு அல்லது நெடுக்கம்
  • பிழை

மீச்சிற்றளவு

 • அளவிடும் கருவி ஒன்றினால் அளவிடக்கூடிய மிகச்சிறிய அளவு அக்கருவியின் மீச்சிற்றளவு எனப்படும்.
 • எடுத்துக்காட்டாக, மீட்டர் அளவுகோலைக் பயன்படுத்தும்போது மிகச் சிறிய பிரிவு 1 மி.மீ ஆகும்.

வீச்சு அல்லது நெடுக்கம்

 • அளவிடக்கூடிய சிறும மதிப்பிற்கும், கருவியினால் அளக்கப்படும் பெரும மதிப்பிற்கும் இடைப்பட்ட அளவு, அளவிடும் கருவியின் வீச்சு அல்லது நெடுக்கம் எனப்படும்.
 • எடுத்துக்காட்டாக, மீட்டர் அளவுகோலின் வீச்சு என்பது 0 செ.மீ முதல் 100 செ.மீ வரையாகும்

பிழை

 • அளவிடப்படும் அளவீடு உரிய மதிப்பிலிருந்து எவ்வளவு மாறுப்பட்டுள்ளது என்பதே பிழை எனப்படும்.

நேர்பிழை எதிர்பிழை

 • அளவிடப்படும் அளவு, உரிய அளவைவிட அதிகம் எனில் நேர்பிழை எனவும், உரிய அளவைவிடக் குறைவு எனில் எதிர்பிழை எனவும் கூறப்படும்.

நீளத்தை அளவிடுதல்

 • ஆய்வகங்களில் எந்த ஒரு பொருளின் நீளத்தையும் அளவிடச் சிறிய மீட்டர் அளவுகோல் பயன்படுகிறது
 • பிரான்சு நாட்டு அறிஞர் பியரி வெர்னியர் வடிவமைத்த வெர்னியர் அளவுகோல் என்னும் துணை அளவுகோலை அளவுகோலுடன் சேர்த்துப் பயன்படுத்தி1 மி.மீ அல்லது 0.01 செ.மீ அளவிற்குச் சரியாக அளக்கமுடியும்.

வெர்னியர் அளவி

 • வெர்னியர் என்பது உயரமானி, அழுத்தமானி அல்லது அளவுகள் குறிக்கப்பட்ட கருவிகளுடன் இணைக்கப்பட்ட நகரும் ஒரு சிறு அளவுகோல் ஆகும்.
 • வெர்னியர் அளவியில் செ.மீ மற்றும் மி.மீ இல் அளவீடுகள் குறிக்கப்பட்ட ஒரு மெல்லிய, நீளமான உலோகப்பட்டை உள்ளது. இது முதன்மை அளவுகோல் எனப்படும்.
 • உலோகப்பட்டையின் இடப்பக்க முனையில் மேல்நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய தாடைகள் அளவுகோலுக்குச் செங்குத்தாகப் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலையான தாடைகள் எனப்படும்.
 • வெர்னியர் அளவுகோலின் நிலையான தாடைகளுக்கு வலப் புறத்திலும், முதன்மை அளவுகோலின்மீது நழுவிச் செல்லும் வகையில் வெர்னியர் அளவுகோல் அமைக்கப்பட்டுள்ளது.
 • இதன் இடது முனையில் மேல் மற்றும் கீழ் நோக்கிய தாடைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இயங்கும் தாடைகள் ஆகும்.
 • வெர்னியர் அளவுகோலில் உள்ள திருகு ஒன்றினைப் பயன்படுத்தி இதனை நகர்த்தவும், நிலையாக ஓரிடத்தில் பொருத்தவும் முடியும்
 • கீழ்நோக்கிய தாடைகள் பொருளின் வெளிப்புற அளவுகளை அளவிடவும்,மேல் நோக்கிய தாடைகள் உட்புற அளவுகளை அளக்கவும் பயன்படுகின்றன.
 • வெர்னியர் அளவுகோலுடன் இணைக்கப்பட்ட மெல்லிய பட்டை உள்ளீடற்ற பொருள்களின் ஆழத்தை அளவிடப் பயன்படுகின்றது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]