உணவு முறைகள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உணவு முறைகள்

Food Systems

 • உணவு முறைகள்
 • வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் மற்றும் அறிகுறிகள்
 • தாது உப்புகள் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் மற்றும் அறிகுறிகள்
 • சரிவிகித உணவு
 • உணவூட்டம்

உணவு முறைகள்

உணவு முறைகள்

 • உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருள்களை உணவு என்கிறோம்

உணவின் ஆதாரங்கள்

தாவரம் மற்றும் விலங்குகளிலிருந்து கிடைக்கும் உணவுகள்

 • தாவரங்களின் வேர், தண்டு, இலை, மலர், காய், கனி, விதை நமக்கு உணவாகின்றன. விலங்குகளிலிருந்து பால், முட்டை, மாமிசம் போன்ற பலவிதமான உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன.

ஊட்டச்சத்துகள் (Nutrients)

 • உணவிலுள்ள, உடலுக்குத் தேவையான சத்துகளை ஊட்டச்சத்துகள் எனக் கூறுகிறோம்.

ஊட்டச் சத்துக்களின் வகைகள் மற்றும் பயன்கள்

ஊட்டசத்துக்களின் வகைகள்

பயன்கள்

கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates) ஆற்றல் அளிக்கின்றன
புரதங்கள் (Proteins) வளர்ச்சி அளிக்கின்றன
கொழுப்புகள் (Fats) ஆற்றல் அளிக்கின்றன
வைட்டமின்கள் (Vitamins) உடலியல் செயல்களை ஒழுங்குப்படுத்துகின்றன
தாது உப்புகள் (Minerals) உடலியக்கச் செயல்களை ஒழுங்குப்படுத்துகின்றன
நீர் (Water) உணவைக் கடத்துகிறது, உடல் வெப்பத்தை ஒழுங்குப்படுத்துகிறது

 

 • காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்களில் நீரின் அளவு வெவ்வேறு விகிதத்தில் உள்ளது.

உணவின் பெயர்

நீரின் அளவு

தர்ப்பூசணி 99 %
வெள்ளரிக்காய் 95 %
காளான் 92 %
பால் 87 %
உருளைக்கிழங்கு 75 %
முட்டை 73 %
ஒரு ரொட்டித் துண்டு 25 %
 • காய்கறிகள், பழங்களை நறுக்கிய பின் கழுவினால், அவற்றிலுள்ள வைட்டமின் சத்து இழக்கப்படுகிறது
 • பெரும்பாலான காய்கறிகள், பழங்களின் தோலில்தான் அதிக அளவில் வைட்டமின்களும், தாது உப்புகளும் காணப்படுகின்றன.
 • தானியங்கள், பயறு வகைகளைப் பலமுறை கழுவுவதால் அதிலுள்ள வைட்டமின்களையும் தாது உப்புகளையும் இழந்து விடுகிறோம்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் மற்றும் அறிகுறிகள்

ஊட்டச்சத்து

உணவுப்பொருட்கள் குறைபாட்டு நோய்

அறிகுறிகள்

புரதம் மீன், இறைச்சி, முட்டை (வெள்ளைக் கரு), பால், பட்டாணி, தானியங்கள் 1. குவாஷியோர்கர் (Kwashiorkar) (1 – 5 வயது குழந்தைகள்) வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும் கால்களில் வீக்கம்
  2. மராஸ்மஸ் (Marasmus) குச்சி போன்ற கை, காலகள், மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடைக் குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல்

 

Click Here to Download