Bone | TNPSC | TET Study Materials | எலும்பு
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

எலும்பு

  • எலும்பு என்பது  முதுகுத்தண்டுள்ள விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் விறைப்பான  உறுப்புக்கள் ஆகும்.
  • எலும்புகள், உடலுறுப்புக்களுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும் அது இடத்துக்கிடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன.
  • அத்துடன்,செங்குருதி அணுக்கள்வெண்குருதி அணுக்கள் என்பவற்றை உருவாக்குவதும், கனிமங்களைச் சேமித்து வைப்பதும் எலும்புகளே ஆகும்.
  • எலும்புகள் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுவதுடன், சிக்கலான உள் மற்றும் வெளிக் கட்டமைப்புக்களையும் கொண்டவையாக உள்ளன.
  • இது, எலும்புகள், நிறை குறைந்தவையாகவும், உறுதியானவையாகவும், கடினத்தன்மை கொண்டவையாகவும் இருப்பதற்கு உதவுவதுடன், அவற்றின் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.
  • எலும்பை உருவாக்கும்திசுக்களில் ஒரு வகை, கனிமமாகிய  எலும்புத் திசுக்கள் ஆகும். இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்த, முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன.
  • எலும்புகளில் காணப்படும் பிற வகைத் திசுக்களில்எலும்பு மச்சைஎன்புறைநரம்புகுருதியணுக்கள்குருத்தெலும்பு என்பவையும் அடங்கும்.
  • நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.
  • உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான்.
  • மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான்.
Click Here To Get More Details