பிணைப்பு - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

பிணைப்பு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan bonding

பிணைப்புகளின் வகைகள்

  • அணுக்கள் நிலையான அமைப்புப் பெற எலக்ட்ரான்களை இழக்கவோ அல்லது ஏற்கவோ செய்யலாம்.
  • எலக்ட்ரான்களை ஏற்கும்போது அவை எதிர்மின் அயனிகளாகவும், இழக்கும்போது நேர்மின் அயனிகளாகவும் மாறுகின்றன.
  • நேர்மின்அயனிக்கும், எதிர்மின் அயனிக்கும் இடையே உள்ள பிணைப்பு மின் நிலையியல் ஈர்ப்பு விசையாகும்.
  • நேர்மின் தனிமங்களுக்கும், எதிர்மின் தனிமங்களுக்கும் இடையே ஏற்படும் இவ்வகை வேதிப்பிணைப்பு, அயனிப்பிணைப்பு அல்லது முனைவுப் பிணைப்பு எனப்படும்.
  • அணுக்கள் தங்களுக்கிடையே எலக்ட்ரான்களைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டும் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறலாம். இவ்வகைப் பிணைப்பு சகப்பிணைப்பு எனப்படும். ஒரு சகப்பிணைப்பில் பங்கிடப்பட்ட எலக்ட்ரான்களின் இணை இருக்கும்.
  • எனினும் சில மூலக்கூறுகள் அல்லது அயனிகளில் பங்கிடப்பட்ட எலக்ட்ரான்கள் ஒரே அணுவிலிருந்து கிடைக்கின்றன.
  • இதற்கு அணைவுப்பிணைப்பு அல்லது ஈதல் சகப்பிணைப்பு என்று பெயர்.

 

Click Here To Get More Details