ஆசிரியர் தேர்வு வாரியம்: விரிவுரையாளர் பணிக்கு நாளை போட்டி எழுத்துத் தேர்வு

Image result for trb exam 2016

 

  • ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (செப்.17) நடைபெற உள்ளது.

 

  • டிஆர்பி சார்பில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை, இளநிலை விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சென்னை மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 2,443 பேர் பங்கேற்று தேர்வெழுத உள்ளனர்.

 

  • செல்லிடப்பேசி, மின்னணு கணக்கிடும் கருவி, மின்னணு கடிகாரம் ஆகிய சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு வர அனுமதி கிடையாது. டிஆர்பி-யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டில் புகைப்படம் பதியவில்லையெனில், இணைப்புத்தாளில் புகைப்படம் ஒட்டி முழுமையாகப் பூர்த்தி செய்தோ அல்லது 2 புகைப்படங்களையோ எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தேர்வர்கள் மையத்துக்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.