நன்மைகள்

நன்மைகள்:

  • பல்வேறு மனித நோய்களுடன் சில நுண்ணுயிரிகள் தொடர்புபடுத்தப்படுவதால் எல்லா நுண்ணுயிர்களையும் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். என்றாலும்,

தொழிலக நொதித்தல் செய்முறை நுட்பம்

(உ-ம்.ஆல்கஹால்வினிகர் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு), எதிர்-உயிரி உற்பத்தி, மற்றும் தாவரங்கள் போன்ற உயர் உயிரினங்களில் குளோனிங்சோதனைக்கு முன்னோட்ட வாகனமாகச் செயல்படுவது போன்ற ஏராளமான நன்மை பயக்கும் செயல்முறைகளுக்கும் பல நுண்ணுயிரிகள் காரணமாய் இருக்கின்றன.

  • தொழில்துறையில்அமினோ அமிலங்கள் தயாரிக்க பாக்டீரியா பயன்படுத்தலாம்..
  • பாலிசாகரைடுகள்,பாலியெஸ்டர்கள், மற்றும் பாலியமைடுகள் போன்ற பல்வேறு வகை பயோபாலிமர்களும்நுண்ணுயிர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. திசு பொறியியல் மற்றும் மருந்து செலுத்தம் போன்ற உயர்-மதிப்பு மருத்துவ பயன்பாடுகளுக்கு பொருத்தமான மிகச்சரியான குணங்களுடனான பயோபாலிமர்களை உயிரிதொழில்நுட்பரீதியாக உற்பத்தி செய்ய நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • வீட்டு, விவசாய மற்றும் தொழில்துறை கழிவுகள் மற்றும் மண், சகதி மற்றும் கடல்சார் சூழல்களில் பரப்பின்கீழிருக்கும்அசுத்தம் ஆகியவற்றை

நுண்ணுயிர்நுட்பம் மூலம் சிதைவுறச் செய்வதற்கும் (பயோடிகிரேடேஷன்)

மற்றும் பயோரீமீடியேஷன் செயல்முறைக்கும் நுண்ணுயிர்கள் உதவி புரிகின்றன.

  • நச்சுக் கழிவுகளை கொல்லும் ஒரு நுண்ணுயிரின் திறனானது ஒவ்வொரு அசுத்தத்தின் தன்மையைப் பொறுத்ததாகும்.
  • புரோபயாடிக்குகள்(ஜீரண அமைப்புக்கு நன்மை பயக்கும் திறனுற்ற பாக்டீரியா) மற்றும்/அல்லது ப்ரீபயாடிக்குகள் (புரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக உட்கொள்ளப்படும் பொருட்கள்) உட்கொள்வதன் மூலம் மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் நுண்ணுயிர்கள் பங்களிப்பு செய்வதாகவும் பல்வேறு கூற்றுகள் தெரிவிக்கின்றன.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.