ஒலிம்பிக் போட்டியில் 19வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி பெல்ப்ஸ் வரலாற்று சாதனை


ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 19வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். ரியோவில் நேற்று 4×100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தங்கம் வென்றார். இதன்மூலம் 19வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி மைக்கேல் பெல்ப்ஸ் வரலாறு படைத்துள்ளார்.

கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை மைகேல் பெல்ப்ஸ் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்றிருந்தார். மேலும் லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்தார். இதனிடையே பெல்ப்ஸ் இல்லாததால் கடந்த 2013ம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க அணி தொடர் நீச்சலில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்து.

இதனால் பெல்ப்ஸ் ஒய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். நீச்சல் போட்டிகளை பொறுத்தவரை எப்போதுமே அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கடும்போட்டி இருக்கும். ரியோ ஒலிம்பிக்கிலும் இந்த இரு நாடுகளுக்குமிடையேதான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதைப் போல் ரியோவில் நேற்று 4×100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும் அமெரிக்கக் குழு 3 : 9.92 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கத்தை தட்டி சென்றது.

இதில் பெல்ப்சின் ஸ்பிலிட் டைம் 47.12 விநாடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு அமெரிக்க நீச்சல் வீரர் நாதன் ஆட்ரியனின் ஸ்பிலிட் டைம் 46.97 விநாடிகள். பெல்ப்ஸ் மற்றும் ஆட்டிரியனின் முயற்சியால் அமெரிக்கக் குழு தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. இதன்மூலம் பெல்ப்சின் ஒலிம்பிக் தங்கப்பதக்க எண்ணிக்கை தற்போது 19ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை உள்ளிட்ட சில பிரிவுகளில் பெல்ப்ஸ் பங்கேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.