வெள்ளி பதக்கமே கிடைத்தது: பெல்ப்ஸை வீழ்த்தினார் சிங்கப்பூர் வீரர்

Deal Score0

  • ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியின் இறுதி போட்டி இன்று காலை நடந்தது. இதில், சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங், தங்க பதக்கத்தை ெவன்று வரலாறு படைத்தார். சிங்கப்பூர் வென்ற முதல் தங்க பதக்கம் இது. இந்த போட்டியில் பந்தய தூரத்தை வெறும் 50.39 வினாடிகளில் கடந்த ஜோசப் ஸ்கூலிங், சாதனை படைத்தார்.

 

  • அமெரிக்காவின் முன்னணி வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், தென் ஆப்பிரிக்காவின் சாட் லி குளோஸ், ஹங்கேரியின் சீசெக் ஆகிய மூவரும் இரண்டாவதாக வந்து வெள்ளி பதக்கம் வென்றனர். இவர்கள் மூவரும் 51.14 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தனர்.

 

  • மூவரும் ஜோசப் ஸ்கூலிங்கை விட, வெறும் 0.75 வினாடிகள் மட்டும் பின்னால் வந்தது குறிப்பிடத்தக்கது. 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில், கடந்த மூன்று ஒலிம்பிக்குகளில் பெல்ப்ஸ் தங்க பதக்கம் வென்றிருந்தார். ஆனால் தொடர்ச்சியாக இந்த போட்டியில் 4வது தங்கம் வெல்லும் பெல்ப்சின் கனவை, ஜோசப் ஸ்கூலிங் முறியடித்தார்.

 

  • இருந்தாலும் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் ஒட்டு மொத்தமாக ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 27ஆக (22 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) உயர்ந்துள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் அவர் வென்ற 5வது பதக்கம் (4 தங்கம், 1 வெள்ளி) இது.