Bedi patavo Bedi paccavo

பேடி பச்சாவோ பேடி பதாவோ

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for modi

  • பிரதான் மந்திரி யோஜனா பெண் குழந்தை களைப் பாதுகாப்போம்-பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் என்பதுதான் பேடி பச்சாவோ-பேடி பதாவோ என்பதன் பொருள். இந்தியப் பெண்கள் பெரிய அளவில் சாதிப்பதற்கு உதவும் நலத்திட்டங்களை, வசதிகளை ஏற்பாடு செய்வதும் அதற்காக பிரச்சாரம்செய்வதுமே இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும்.

 

  • ஒரு நாட்டின் குடிமக்கள் வலிமையாகத் திகழும்போதே, அந்நாடு வலிலிமையாகத் திகழமுடியும். குடிமக்களில் சரிபாதி யான பெண்கள் மதிப்பாக நடத்தப் படாதபோது, அந்நாட்டின் வளர்ச்சி முழுவேகத்தில் இருக்காது. இந்தியர்கள் பெண் கடவுள் வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வியப்பளிக்கக்கூடியது.

 

  • இந்தியாவின் அறுசமய கடவுள் வழிபாட்டில் சக்தி வழிபாட்டுக்கும் முக்கிய இடமுண்டு. ஆனால் நிஜ வாழ்வில் பல குடும்பங்களில் பெண்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுவதில்லை. சமூகத்தில் இடையூறுகளுக்கு உள்ளாகும் பெண்கள் அநேகம்.

 

  • இந்தியாவில் ஆண்-பெண் விகிதத்தில் நிலவும் இடைவெளியைக் குறைத்து சமநிலைக்குக் கொண்டுவரவும்,கல்வியளித்து அவர்களுக்கு சம வாய்ப்பு கள் வழங்கி எதிர்காலத்தில் அவர்களை உயர்நிலையை அடையச் செய்யவும் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் பேடி பச்சாவோ பேடி பதாவோ.

 

  • மக்கள்தொகை கணக்கீட்டில் ஆண்-பெண் விகிதம் குறைந்தபடியே வருவதைக் காணமுடிகிறது. இந்தியாவின் தேசிய ஆண்-பெண் சராசரி விகிதம் 1991-இல் 1000 ஆண்களுக்கு 945 பெண்கள் எனவும், 2001-இல் 927 ஆகவும், 2011-இல் 918 ஆகவும் சரிந்தபடியே செல்வதைக் காணமுடிகிறது.

 

  • இந்த விகிதம் பிறப்பதற்கு முன்பே ஆணா பெண்ணா என்று கண்டறிந்து, பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப் படுவதைத் தெரிவிப்பதோடு, பெண்ணாகப் பிறந்தவர்கள் தம் வாழ்வில் பெண் என்பதாலேயே நிறைய இடையூறுகளை எதிர்கொள்வதையும் தெரிவிக்கிறது.

 

  • கருவிலிருக்கும் குழந்தை ஆணா-பெண்ணா என்று கண்டறிந்து சொல்வது குற்றம்என்றபோதும்,பலஇடங்களில்இந்தவிவரங்கள் சொல்லப்படுவதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

 

  • இத்திட்டம் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கு மட்டுமின்றி, அவர்கள் கல்விபெறவும், வாழ்க்கையில் காலூன்றி நிற்பதற்கு முன்னுரிமை தரவும் வழிவகுக்கிறது.

 

  • பெண்கள் கருவிலேயே பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு முன்னுரிமை தந்து, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக மட்டும் இத்திட்டத்தில் ரூபாய் நூறுகோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச மகளிர் தினமான ஜனவரி 22, 2015 அன்று இத்திட்டத்தை அரியானா மாநிலம் பானிபட்டில் தொடங்கி வைத்தார்.

 

  • மேலும் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு பெரிய நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ரூ150கோடி இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • பானிபட்டில் திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய நரேந்திர மோடி, மக்கள் 18-ஆம் நூற்றாண்டு மனோபாவத்தை விட்டு வெளியே வந்து பெண் குழந்தைகளை பெற்று வளர்க்கவும், அவர்களுக்கு கல்வி தரவும் முன்வரவேண்டும் என்றார்.
LATESTS GOVERNMENT JOBS