மின்கலம் | Battery - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

மின்கலம் | Battery

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

 • மின்சக்தியை இரசாயன முறையில் உற்பத்தி செய்தளிக்கும் மின்னிரசாயனத் தொகுதிகளைமின்கலம்எனக் கூறுகிறோம்.
 • மின்கலங்களில் வேதியியல் தாக்கங்களின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு நடைபெறும் சக்தி மாற்றம் இரசாயன சக்தி மின்சக்தியாக மாற்றப்படுவதாகும். ஒரு மின்கலம் என்பது ஒன்றல்லது ஒன்றுக்கும் மேலான மின்வேதி அணுக்களை கொண்டிருக்கும்.சக்தியாக மாற்றப்படுவதாகும்.

மின்சுற்றொன்றில் மின்கலத்தைக் குறிக்கும் குறியீடு. ஆரம்பகால மின்கலமான வோல்ட்டாக் கலத்தின் கட்டமைப்பு வரைபடம்.

தனியொரு மின்னிரசாயன கலம் மின்கலம் எனவும் பல மின்னிரசாயன கலத்தொகுதிகள் ஒன்றுசேர்த்து

 

மின்கலன்களின் வகைகள்

 1. முதன்மை மின்கலன்கள்
 2. துணை மின்கலன்கள் (சேமிப்பு மின்கலன்கள்)

முதன்மை மின்கலன்கள்

 • முதன்மை மின்கலன்கள் முதன்மை மின்கலன்கள் என்பவை ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படக் கூடியவை, மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.
 • மின்கலன்கள் பயன்படுத்தப்படும்பொழுது அவற்றிலுள்ள வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுவதால், மீண்டும் இவற்றை உபயோகிக்க முடியாது.
 • எடுத்துக்காட்டு: கடிகாரங்கள், டார்ச் விளக்குகள், டிஜிட்டல் கடிகாரங்கள், கணக்கிடும் கருவி (Calculator) போன்றவைகளில் பயன்படும் மின்கலன்கள்.

லெக்லாஞ்சி மின்கலன் (Leclanche Cell)

 • அம்மோனியம் குளோரைடு கரைசல் மின்பகு திரவமாகச் செயல்படுகிறது.
 • அம்மோனியம் குளோரைடு கரைசலினுள் ஒரு துத்தநாகத் தண்டும், ஒரு நுண் துளைப்பாண்டமும் நிறுத்தப்பட்டுள்ளது.
 • நுண்துளைப் பாண்டம் கார்பன் தண்டைக் கொண்டுள்ளது.
 • கார்பன் தண்டைச் சுற்றிலும் மாங்கனீஸ் – டை ஆக்சைடு மற்றும் தூளாக்கப்பட்ட கார்பன் துகள்களின் கலவை வைக்கப்பட்டுள்ளது.
 • கார்பன் தண்டு நேர் மின்வாயாகவும் துத்தநாகத் தண்டு எதிர் மின்வாயாகவும் செயல்படுகிறது.
 • அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் மற்றும் குளோரைடு அயனிகளாகப் பிரிகிறது, குளோரைடு அயனி துத்தநாகத் தண்டை நோக்கி நகர்ந்து எதிர்மின் துகள்களை அங்குப் படியச் செய்கிறது. எனவே, துத்தநாகத் தண்டு எதிர் மின்சுமை அடைகிறது.
Click Here To Get More Details