அடிப்படை உரிமைகளும் கடமைகளும்

  • மக்களுக்குச் சொத்துரிமை, பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின் III ஆம் பகுதி தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
  • இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி, அடிப்படை உரிமைகளைப் பெறலாம். உரிமைகளைப் பெறுவது போன்றே கடமையை ஆற்றுவது அவசியமாகும்.
  • அரசியலமைப்புச் சட்டங்கள், தேசியக் கொடி, நாட்டைப் பாதுகாத்தல் போன்ற பதினோரு அடிப்படைக் கடமைகளை வலியுறுத்துகின்றன.
  • இவை 86 ஆவது திருத்தத்தின் வழியாக விதிக்கப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமைகள்

  • இந்திய அரசியலமைப்பு, குடிமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குத் தேவையான உரிமைகளை அடிப்படை உரிமைகளாகக்கொடுத்துள்ளது.
  • தனிமனிதன், தன் சொந்த நலத்துடன், சமுதாய நலத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நெறிமுறையே அடிப்படை உரிமைகளாகும்”.
  • சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள், தனிமனிதனின் கல்வி, அறிவு ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுத்து, தனிமனிதனை மேம்படுத்தி அவற்றின் வழியாகச் சமுதாய மற்றும் தேசத்தின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளது.
  • அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றபொழுது, நீதிமன்றங்களில் முறையீடு செய்து நீதிப் பெறலாம். உரிமைகள் இன்றி மனிதனால் நல்ல வாழ்க்கை வாழ இயலாதுஎன்பது லாஸ்கியின் கருத்தாகும்.
  • இந்திய அரசியலமைப்பில் மூன்றாவது பகுதியில் ஏழு வகையான அடிப்படை உரிமைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை 12 முதல் 35 வரையில் உள்ள சரத்துகளில் அடங்கியுள்ளன.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.