காரங்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

காரங்கள்:

 • ஹைட்ராக்சில் தொகுதிகளையுடையனவும், நீர்மக் கரைசல்களில் ஹைட்ராக்சில் அயனிகளைத் தரவல்ல சேர்மங்கள் காரங்கள் எனப்படும்.
 • உலோக ஆக்ஸைடுகளை நீரில் கரைக்கும்போது காரங்கள் கிடைக்கின்றன.
 • நீரில் கரையும் காரங்கள் எரிகாரங்கள் எனப்படும்.
 • நீரில் கரையாத காரங்கள் மென்காரங்கள் எனப்படும்.
 • எரிகாரங்கள் உதாரணம்: சோடியம் ஹைட்ராக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
 • காரங்கள் கசப்புச் சுவையுடையது.
 • இவற்றின் நீர்க்கரைசல்கள் சோப்பைத் தொடுவது போன்று வழவழப்பாக இருக்கும்.
 • சிவப்பு லிட்மஸை நீலநிறமாக மாற்றும்.
 • இவை அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
 • இவற்றின் நீர்க்கரைசல்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன.
 • நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை காரங்கள் எனப்படுகின்றன.
 • காரங்கள் கசப்புச் சுவையையும் சோப்பு போன்ற வழுவழுப்புத் தன்மையையும் கொண்டுள்ளன.
  • எ.கா. : சலவை சோடா, எரிசோடா, எரிபொட்டாஷ்
 • வலிமிகு காரங்கள் நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன. எ.கா. NaOH, KOH
 • வலிமை குறைந்த காரங்கள் நீரில் பகுதியளவே அயனியுறுகின்றன.
  • எ.கா. : NH4OH, Ca(OH)2
 • சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு தயாரிக்கப் பயன்படுகிறது
 • கால்சியம் ஹைட்ராக்ஸைடு கட்டடங்களுக்கு வெள்ளை அடிப்பதற்கும் பயன்படுகிறது.
 • அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு துணிகளிலுள்ள எண்ணெய்க் கறை மற்றும் பிசுக்கினை நீக்கப் பயன்படுகிறது.
 • அமில, கார நிறங்காட்டிகள்
நிறங்காட்டி அமிலத்தில் காணப்படும் நிறம் காரத்தில் காணப்படும் நிறம்
லிட்மஸ் சிவப்பு நீலம்
ஃபினாப்தலீன் நிறமற்றது இளஞ்சிவப்பு
மெத்தில் ஆரஞ்சு ஆரஞ்சு மஞ்சள்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]