Bacteria | TNPSC | TET Study Materials | பாக்டீரியா
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பாக்டீரியா (Bacteria):

  • பாக்டிரியச் செல்கள் ஒரு ஒற்றை (DNA) டி.என்.ஏ சங்கிலியைக் கொண்டுள்ளன.
  • யூகேரியோட் குரோமோசோம்களில் காணப்படுவது போல், இதில் இணை புரதம் இல்லை.
  • பாக்டீரிய ஜீன்களும் யூகேரியோட் ஜீன்களைப் போன்றே இரட்டித்தல், பண்புகளை வெளிப்படுத்துதல், திடீர்மாற்றம் மற்றும் ஜீன் மறுசேர்க்கை ஆகிய பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
  • பாக்டீரியாக்களின் ஜீன் மறுசேர்க்கை மூன்று நிகழ்ச்சியாக பிரிக்கலாம் இணைவு, 2. டிரான்ஸ்டக்சன் 3. உருமாற்றம்.

பாக்டீரியா நோய்கள் :

  • சால்மொனல்லா எனப்படும் நோய் தொற்று கிருமி பேசில்லஸ் வகையைச் சார்ந்த பாக்டீரியா ஆகும்.
  • மனிதனில் மூன்று வகையான நோய்களை தோற்றுவிக்கிறது. 1. டைபாய்டு அல்லது பாராடைபாய்டு கேஸ்ட்ரோ என்டிரைட்டிஸ் மற்றும் செப்டிசீமியா.
  • டைபாய்டு ஜூரம், சால்மானல்லா டைபி என்ற பாக்டீரியத்தால் உண்டாகிறது.
  • கேஸ்ட்ரோ என்டிரைட்டிஸ் நோய் சால்மானல்லா மற்றும் பெரும்பான்மையான சால்மானல்லா காலரேசியஸ் என்ற பாக்டீரியத்தால் உண்டாகிறது.
  • மனிதனில் காலரா நோய், விப்ரியோ காலரே பாக்டீரியத்தால் தோன்றுகிறது.
  • இது ஆதி காலந்தொட்டே மனிதனில் சொல்லொன்னா துயரங்களையும் இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
  • மனிதனில் பிளேக் நோய் எர்சினியா பெஸ்டின் என்னும் பாக்டீரியாவின் தொற்றால் உண்டாகிறது.
  • பிளேக் ஒரு நுகர்ச்சியற்ற கிராம் நெகடிவ் வகை பாக்டீரியம் ஆகும்.
Click Here To Get More Details