அடல் பென்சன் யோஜனா

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Benson Atal Yojana

 

 • இந்திய அரசு, வயதானவர்களின் வாழ்க்கை பெரிதும் எளிதாகவும் வசதியா கவும் இருப்பதற்கு பொருளாதாரரீதியில் உதவும் நோக்கத்துடன் கொண்டுவந்த திட்டமே அடல் பென்ஷன் யோஜனா. வரன்முறைப்படுத்தப்படாத பிரிவில் வரும் ஏழைமக்களுக்கு வருவாய் பாதுகாப்பை இத்திட்டம் உறுதிசெய்யும்.

 

 • இத்திட்டம் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அதிகாரிகளால் நிர்வகிக்கப் படுகிறது.

 

 • அடல் பென்ஷன் திட்டமென்பது, வரன்முறைப்படுத்தப்படாத பிரிவில் வரும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் 5,000 வரை ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்யும் திட்டமாகும். ஒருவர் 60 வயதை எட்டியதும், இந்த ஆதாயத்தை அடையலாம். இத்திட்டத்தில் தனி நபரின் பங்களிப்புக்கேற்ற ஓய்வூதியத் தொகை மாறுபடும்.

 

இத்திட்டத்தில் பலனடைவதற்கு

 

 • மனுச் செய்பவரின் குறைந்தபட்ச வயது 18-ஆகவும், அதிகபட்சம் 40 வயதை மிகாமலும் இருக்கவேண்டும்.

 

 • மனுச் செய்பவரின் பெயரில் அவசியம் புதிய வங்கிக் கணக்கு தொடங்கப் பட்டிருக்க வேண்டும்.

 

 •  மனு செய்பவர் தனது அலைபேசி எண்ணை வங்கிக்குக் கொடுத்து, முழு விவரங்களுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

 

 • ஜூன் 1, 2015 முதல் டிசம்பர் 31, 2015-க்குள் இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு அரசின் பங்களிப்பு கிடைக்கும்.

 

 • இதர பிற சட்டபூர்வமான சமூகப் பாதுகாப்பு திட்டங்களால் ஆதாயமடை பவர்கள், அரசாங்கத்தின் ஆதரவைப் பெற மாட்டார்கள்.

 

 • தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினராக பதிவுபெற்றவர்கள்.

 

 • நிலக்கரி சுரங்க ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினராக பதிவுபெற்றவர்கள்.

 

 • அஸ்ஸாம் தேயிலை தோட்ட ஓய்வூதியத் திட்ட உறுப்பினர்கள்.

 

 • மீனவர் ஓய்வூதியத் திட்ட சட்ட வரம்பின்கீழ் வருபவர்கள்

 

 • ஜம்மு மற்றும் காஷ்மீர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினரானவர்கள்ஆகியோர் இத்திட்டத்தின்கீழ் பலன்பெற முடியாது.

 

 • மத்திய அரசு முதல் ஐந்து வருடங்களுக்கு (2015-2019) இத்திட்டத்தில் இணைபவர் களுக்கு, தன் பங்களிப்பைச் செய்கிறது. மத்திய அரசின் பங்களிப்புத் தொகை ஆண்டுக்கு ரூ. 1,000 மாகவோ அல்லது திட்டத்தில் சேர்பவரின் ஆண்டுத் தொகை யில் ஐம்பது சதவிகிதமோ இரண்டில் எது குறைவோ அதுவாக இருக்கும்.

 

 • இந்திய பொருளாதார அமைச்சகம் உருவாக்கித் தரும் விதிமுறைகளின்படி இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஓய்வூதியத் தொகை வரன்முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இத்திட்டம் நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் படும்.

 

ஆடவகணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகள்

 

 • நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்

 

 • ஆடவ -பதிவு விண்ணப்பம் வேண்டு மெனக் கேளுங்கள்

 

 • அதைக் கவனமாக நிரப்பி, உங்களது ஆதார் அட்டை விவரங்களும் கொடுக் கவும்

 

 • படிவத்தில், உங்கள் அலைபேசி எண்ணையும் தொடர்பு விவரங்களையும் நிரப்பவும்

 

 • உங்களது சேமிப்பு கணக்கில் எப்போது குறைந்தபட்ச சேமிப்புத் தொகையைப் பேணுவதை உறுதி செய்யுங்கள்

 

 • மாதந்தோறும் உங்களது பங்களிப்புத் தொகை உங்களது கணக்கிலிருந்து பிடித்துக் கொள்ளப்படும்

 

 • இந்த நடைமுறைகளில் ஏதாவது சந்தேகமிருப்பின் உங்களது வங்கியை அணுகி தெளிவு செய்து கொள்ளலாம். முதன்முதலில் இத்திட்டத்துக்காக நீங்கள் தொகை செலுத்தும் தேதியே, மாதந்தோறும் நீங்கள் தொகை செலுத்தவேண்டிய தேதியாகும். ஒரு முறை தேதி உறுதியான பின் எந்தச் சூழ்நிலையிலும் தேதியை மாற்ற முடியாது.

 

 • வங்கியில் போதுமான குறைந்தபட்ச தொகையைப் பேணாவிட்டால், வங்கி அவர்களுக்கு அபராதம் விதிக்கும். ஏதோவொரு காரணத்தால் ஆறு மாதங் களுக்கு தொகை செலுத்தாவிட்டால் உங்கள் ஓய்வூதிய கணக்கு தேக்க நிலையை எட்டும். பன்னிரெண்டு மாதங்கள் தொகை செலுத்தாவிட்டால் உங்கள் ஓய்வூதியக் கணக்கு செயலிழக்கும். 24 மாதங்கள் இந்நிலை தொடர்ந்தால் முழுவதுமாக கணக்கு முடிவுக்கு வந்துவிடும்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]