அணி | ani tamil

tamil-grammar

  • அணி என்பதற்கு அழகு என்பது பொருள் – செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும்.

பின்வருநிலையணி

  • செய்யுளில் முன்னர் வந்த சொல்லும் பொருளும் பல முறை பின்னரும் வருவது பின்வருநிலையணியாகும். அது சொல்பின்வருநிலை, பொருள் பின்வருநிலை, சொல்பொருள் பின்வருநிலை என மூன்று வகைப்படும்.
  1. சொல் பின்வருநிலையணி
  • செய்யுளில் முன்னர் வந்தசொல் வேறுபொருளில் பின்னரும் பலமுறை வருவது சொல்பின்வருநிலை அணியாகும்.
  • இக்குறட்பாவில் ‘உடைமை’ என்னும் சொல் பெற்றிருத்தல் உடைய பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல்பின்வருநிலை அணியாகும்.

 

  1. பொருள் பின்வருநிலையணி
  • செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது பொருள் பின்வருநிலை அணியாகும்.
  • இப்பாடல் மலர்தல் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல் ஆகிய பல சொற்கள் வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலை அணியாகும்.
  1. சொற்பொருள் பின்வருநிலை
  • செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும்.
  • இதில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும்.

 

தற்குறிப்பேற்ற அணி

  • தன் + குறிப்பு + ஏற்றம் = தற்குறிப்பேற்றம்
  • குறிப்பு – மனக்கருத்து
  • இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன்கருத்தை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்றவணியாகும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.