வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

  • ரிசர்வ் வங்கி தலையிட்ட போதிலும், அமெரிக்க டாலருக்கு நிகராக, ரூபாயின் மதிப்பு, நேற்று 30 காசுகள் குறைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து, 68.86 ஆக நிலைகொண்டது.

 

  • அமெரிக்க அதிபர் தேர்தலில், யாரும் எதிர் பாராத வகையில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், அவருடைய செயல் பாடுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, டாலரின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

 

  • அதைத் தொடர்ந்து, இந்தியாவில், வெளிநாட்டு கரன்சிகளில் முதலீடு செய்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், முதலீடுகளை திரும்ப பெறுகின்றனர். மேலும், செல்லாத ரூபாய்நோட்டு விவகாரமும் சேர்ந்ததால், டாலருக்கு நிகராக, ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

  • இந்த ஆண்டு மட்டும், ரூபாயின் மதிப்பு, 3.9 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முன், 2013, ஆகஸ்ட், 28ல், ரூபாயின் மதிப்பு, 68.85 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி, இதுவரை இல்லாத அளவுக்கு, 68.86 ஆக இருந்தது. இதனிடையில்,ரிசர்வ் வங்கி தலை யீட்டதால், இதில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.

 

  • ‘அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால், சர்வதேச அளவில், பல்வேறு நாடுகளின் கரன்சிகள் மதிப்பு பெரும்

 

  • சரிவை சந்தித்து வருகின்றன. அவற்றுடன் ஒப்பிடுகையில், ரூபாயின் மதிப்பில் மிகப் பெரிய பாதிப்பு இல்லை’ என, நிபுணர்கள் தெரிவித்தனர்.

 

  • நிலைமையை சரியாக கையாளா விட்டால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 70 முதல் 72 வரை சரியும் வாய்ப்பு உள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.