Alloys | TNPSC | TET Study Materials | உலோகக் கலவைகள்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உலோகக் கலவைகள்

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் உருகிய நிலையில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு படித்தான கலவை.
  • இடப்பெயச்சி உலோகக் கலவை : இவ்வகை உலோகக் கலவைகளில் ஓர் அணு இருந்த இடம் சில நேரங்களில் மற்றோர் அணுவால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
  • இடைவெளி நிரப்பப்பட்ட உலோகக் கலவை : இவ்வகை உலோகக் கலவைகளில் சிறிய உருவ அளவு கொண்ட அலோகங்களான ஹைட்ரஜன், போரான், கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்ற தனிம அணுக்கள், உலோக படிக அமைப்பில் ஓர் வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடைப்பட்ட இடைவெளிகளை ஆக்கிரமிக்கின்றன.
  • இரும்பு, அலுமினியம், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகிய உலோகங்கள் அடங்கிய உலோகக் கலவை ‘அல்னிகோ’ எனப்படும். இது காந்தங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
  • சாதாரண காந்தத்தைவிட ‘அல்னிகோ’ 25 மடங்கு அதிக காந்தத்தன்மை உடையது.

உலோகக் கலவைகளின் பயன்கள்:

பெயர்பித்தளை

  • பகுதிப் பொருட்கள் – காப்பர், ஜிங்க்
  • பயன்கள் – ஆணிகள், ஜன்னல் மற்றும் கதவுச் சட்டங்கள் செய்ய.

பெயர்வெண்கலம்

  • பகுதிப் பொருட்கள் – காப்பர், டின்
  • பயன்கள் – சிலைகள் மற்றும் இயந்திரத்தின் பாகங்கள் செய்ய.

பெயர்பற்றாசு

  • பகுதிப் பொருட்கள் – டின், லெட்
  • பயன்கள் – மின் சாதனங்கள் மற்றும் குடிநீர்க் குழாய் உற்பத்தித் தொழிலில் உலோகங்களை உருக்காமல் இணைக்க.
Click Here To Get More Details