ஆல்காக்கள் (Algae)

ஆல்காக்கள் (Algae)

 

 • இவை தாலோபைட்டின் உறுப்பினர்கள்.
 • இவைகள் நிறமிகளால் வேறுபடுகின்றன. குளோரோஃபில் எல்லா வகைகளிலும் காணப்படுகிறது.
 • நீலப்பச்சைப் பாசியைத் தவிர, மற்ற அனைத்து வகைகளிலும் யூகாரியாடிக் செல்களே காணப்படுகின்றன.
 • இனப்பெருக்கம், ஐசோகேமி, அனைசோகேமி மற்றும் ஓகேமி என்ற வகைகளில் காணப்படுகிறது.
 • தாலோபைட்டா தாவரப்பிரிவின் இரு தொகுதிகள்
 1. ஆல்காக்கள் பூஞ்சைகள்
 • ஆல்காக்கள் ஒருவகைத் தாவரம் ஆகும்.இவற்றின் உடலத்தில் தண்டு இலை வேர் என்று வேறுபாடோ உண்மையான திசுக்களோ கிடையாது. இத்தகைய உடலமைப்பு தாலஸ் என்கிறோம். இத்தாவரங்களில் வாஸ்குலார் திசுக்களும் இல்லை.
 • ஆல்கால்களை பற்றி அறிய உதவும் துறைக்கு பைக்காலஜி (Phycology) அல்லது ஆல்காலஜி (Algology) என்று பெயர்.
 • ஆல்காக்களைப் பற்றி ஆய்வு செய்பவர் ஆல்காலஜிஸ் ஆவர்.
 • பேராசிரியர்கள். M.O.P. ஐயங்கார்V. தேசிகாக்காரி. V.S. சுந்தரலிங்கம் கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆல்கால்ஜி வல்லுனர்களில் குறிப்பிடத்தக்க சிலர் ஆவார்.
 • ஏறத்தாழ 20000 வகையான ஆல்காக்கள் இதுவரை இனம் பிரிக்கப்பட்டள்ளன.
 • பச்சைப் பாசிகளில் 7000 இனங்களும் சிவப்புப் பாசிகளில் 4000 இனங்களும் பழுப்புப் பாசிகளில் 2500 இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தனித்து நீரில் நீந்தும் மிக நுண்ணிய ஆல்காக்கள் பிளாங்க்டான் எனப்படும்

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.