வேளாண்மைப் பரவல்

  • எகிப்து, மத்தியப் பகுதி மற்றும் இந்தியா ஆகியவை முற்காலத்தில் காட்டிலிருந்து பெறப்பட்ட தாவரங்களை திட்டமிட்டு விதைத்தல் மற்றும் சாகுபடி செய்தலுக்கு பெயர்பெற்ற பகுதிகளாகும்.
  • இக்காலத்தில் சுயேச்சையான விவசாயம் என்பது வடக்கு மற்றும் தென் சீனா, ஆப்பிரிக்காவின் சஹெல், நியூ கினி மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் உருவானது.
  • இப்பழங்கால விவசாயத்தில் எம்மர் கோதுமை, என்கான் கோதுமை, தோல்நீக்கிய பார்லி,பட்டாணி, அவரையினங்கள், துவரை மற்றும் சணல் முதலான எட்டு நியோலிதிக் அடிப்படை பயிர்கள் குறிப்பிடப்படுகின்றன.
  • கி.மு.7000 ஆம் ஆண்டிலிருந்தே இந்திய துணைக்கண்டம் கோதுமை மற்றும் பார்லி ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தது.
  • பலுசிஸ்தானத்தில் உள்ள மெஹர்கட்டில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கி.மு.7000 ஆம் ஆண்டில், சிறிய அளவிலான விவசாயம் எகிப்தை எட்டியது. கி.மு.6000 ஆம் ஆண்டில், நடுத்தர அளவிலான விவசாயம் நைல் நதிக்கரையில் செய்யப்பட்டது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.