Adai mozhi in Tamil | TNPSC | TET Study Materials | அடைமொழி

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  1. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் – சீவக சிந்தாமணி
  2. தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. – திருக்குறள்
  3. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட    பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்   –   சிலப்பதிகாரம்
  4. இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம்/மணிமேகலை
  5. நெடுந்தொகை – அகநானூறு
  6. கற்றறிந்தார் ஏற்கும் நூல் – கலித்தொகை
  7. பௌத்த காப்பியங்கள் – மணிமேகலை /குண்டலகேசி.
  8. மணிமேகலை துறவு, துறவு நூல்,பௌத்தகாப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் – மணிமேகலை
  9. புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு
  10. வஞ்சி நெடும் பாட்டு – பட்டினப்பாலை
  11. பாணாறு – பெரும்பாணாற்றுப்படை
  12. பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு – குறிஞ்சிப்பாட்டு
  13. புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை திருமுருகாற்றுப்படை
  14. வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் – நாலடியார்
  15. சின்னூல் என்பது – நேமிநாதம்
  16. வெற்றி வேட்கை, திராவிட வேதம்,தமிழ் மறை வேதம், திருவாய் மொழி – நறுந்தொகை
  17. திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் –பெரிய புராணம்
  18. ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் இராமாயணம்
  19. முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு – பழமொழி
  20. கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம்.
  21. தமிழ் மொழியின் உபநிடதங்கள் – தாயுமானவர் பாடல்கள்
  22. குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் – குற்றாலக் குறவஞ்சி
  23. குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ்
  24. உழத்திப்பாட்டு – பள்ளு
  25. இசைப்பாட்டு –பரிபாடல் / கலித்தொகை
  26. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை – பெருங்கதை
  27. தமிழர் வேதம் – திருமந்திரம்
  28. தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி திருவாசகம்
  29. தமிழ் வேதம் – நாலாயிர திவ்ய பிரபந்தம்
  30. குட்டி தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்

 

Click Here To Get More Details