7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை… கூடுதல் செலவை நினைத்து கையைப் பிசையும் மத்திய நிதி அமைச்சகம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை... கூடுதல் செலவை நினைத்து கையைப் பிசையும் மத்திய நிதி அமைச்சகம்

 

  • 7- வது ஊதிய கமிஷனை பரிந்துரை செய்தால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ .1 லட்சம் கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

  • கடந்த 2014-ம் ஆண்டு 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைக்கப்பட்டு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

 

  • இதன்படி 2016-2017- ஆம் நிதியாண்டில் இது நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

  • இது தொடர்பாக நேற்று நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது… மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 619 கோடி செலவாகிறது.

 

  • 7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையின் , 2016-17-ம் நிதியாண்டில்79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும். அதே போன்று நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியதாரர்களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும்.

 

  • இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லீ கூறினார்.

 

  • 7 வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் எப்போது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]