2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 5 புதிய விளையாட்டுகளுக்கு அனுமதி!

Deal Score0

 

201608050908482243_Olympic-competition-in-2020-karate-5-games-including-newly_SECVPF (1)

 

  • 2020 ல் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 5 புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

  • 2016 ஒலிம்பிக் போட்டி, பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் என முடிவான நிலையில் 2020 ஒலிம்பிக்கை எங்கு நடத்துவது என்பதற்கான இறுதிச் சுற்றில், ஜப்பானின் தலைநகர் டோக்கியோ, ஸ்பெயினின் தலைநகர் மேட்ரிட், துருக்கியின் பெரிய நகரான இஸ்தான்புல் ஆகிய மூன்று நகரங்களும் போட்டியிட்டன. 2013-ல், அர்ஜெண்டினா நாட்டுத் தலைநகர் போனஸ் ஏரிஸில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இறுதிச் சுற்றுத் தேர்வில் டோக்கியோவை ஆதரித்து 60 பேரும், இஸ்தான்புல்லை ஆதரித்து 36 பேரும் வாக்களித்ததால் 2020 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றது, டோக்கியோ.

 

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுப் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பேஸ்பால், சாஃப்ட்பால், கராத்தே, ஸ்கேட்போர்ட், மலையேறுதல் மற்றும் அலைச்சறுக்கு போன்ற 5 விளையாட்டுகளும் 2020 ஒலிம்பிக்கில் இடம்பெற உள்ளன. இத்தகவலை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

 

  • ரியோ ஒலிம்பிக்கில் புதிதாக ரக்பி செவன் மற்றும் கோல்ஃப் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 112 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது கோல்ஃப். 1924-ம் ஆண்டு நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இப்போதுதான் ஒலிம்பிக்கில் ரக்பி செவன் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.