landfill ordinance

நில அவசர சட்டத்தை 4-வது முறையாக கொண்டுவர மாட்டோம்: மோடி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

Image result for angry modi

 

  • நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை 4-வது முறையாகக் கொண்டுவர மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

  • மேலும், நிலச் சட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள மசோதாவில் திருத்தங்கள் செய்ய விவசாயிகள் நலனுக்கான யோசனைகளை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

 

  • இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’தில் மோடி கூறும்போது, “நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் நாளையுடன் (திங்கள்கிழமை) முடிகிறது. ஆனால், 4-வது முறையாக அவசர சட்டத்தை கொண்டு வரமாட்டோம்.

 

  • அதேநேரத்தில், விவசாயிகள் பலன் அடைய கூடிய வகையில் யோசனைகள் தெரிவித்தால் அதை ஏற்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

 

  • நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பற்றி தவறான கருத்துகள் பரப்பப்பட்டு விட்டன. விவசாயிகள் மத்தியில் அரசியல் கட்சியினர் பயத்தை ஏற்படுத்தி விட்டனர். நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013-ல் திருத்தங்கள் மேற்கொள்ள மாநில அரசுகள் யோசனை தெரிவித்த நிலையிலும், அந்த திருத்தங்களைப் பற்றி தவறான கருத்துகளை பரப்பி விட்டனர்.

 

  • நிலம் கையகப்படுத்தும் மசோதா விஷயத்தில் அரசு திறந்த மனதுடன் உள்ளது. நாம் திரும்ப திரும்ப சொல்கிறேன், விவசாயிகளின் நலனுக்கான எந்த யோசனையாக இருந்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறேன். அவசர சட்டத்தில் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு 13 முக்கிய அம்சங்களை அரசு ஒன்றிணைத்துள்ளது. ஆனால், சர்ச்சை காரணமாக இந்த விஷயம் சிக்கலாகி விட்டது.

 

  • இப்போது நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் காலாவதியாவதால், மேற்கூறிய 13 அம்சங்கள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில்அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.இதன்மூலம் நிறைவடையாமல் உள்ள பணிகள் முடிக்கப்படும்.

 

  • விவசாயிகள் பொருளாதார ரீதியாக எந்த வகையில் நஷ்டம் அடைய கூடாது என்பதற்காகத்தான் இதை செய்கிறோம். விவசாயிகளுக்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம். எங்களை பொறுத்த வரையில், ‘ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்பது வெறும் ஸ்லோகம் மட்டுமல்ல. அது மந்திரம். அதனால்தான், விவசாயிகள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்க சுதந்திர தின உரையில் நான் அறிவித்தேன்” என்றார் மோடி.

 

  • முன்னதாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, கடந்த 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு பாஜக அரசு புதிய மசோதாவை அறிமுகம் செய்தது. மக்களவையில் மசோதா நிறைவேறினாலும், மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்பின் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

 

  • இந்நிலையில், கடந்த மே மாதம் 31-ம் தேதி 3-வது முறையாக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அவசர சட்டம் இன்றுடன் காலாவதியாகிறது. அதனால், மத்திய அரசு 4-வது முறையாக அவசர சட்டத்தை கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்படி 4-வது முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், நாட்டில் அதுவே முதல்முறையாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

 

  • இதற்கிடையில், நிலம் கையகப்படுத்தும் மசோதா, பாஜக எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. இக்குழு தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரை கால அவகாசம் பெற்றுள்ளது. இந்தச் சூழ்நிலையில், 4-வது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை கொண்டு வரமாட்டோம் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக அறிவித்தார்.
LATESTS GOVERNMENT JOBS