ஒலிம்பிக் பதக்கம்… 36 ஆண்டுகால ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்திய ஹாக்கி அணி?

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

400x400_MIMAGEf2ae5a95ed83698608feebaf7e359e0d

 

  • ரியோடி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி கடந்த 36 ஆண்டுகளாக ஒரு பதக்கம்கூட வெல்லாத ஏக்கத்துக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

  • ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி. 1980-இல் நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அப்போது இந்திய அணி கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் இருந்தார்.

 

  • அவ்வளவுதான்… இதன் பின்னர் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணிக்குப் பின்னடைவுதான்… 36 ஆண்டுகாலமாக ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம்கூட இந்திய ஹாக்கி அணியால் வெல்ல முடியவில்லை.

 

அதிர்ச்சியும் ஏமாற்றமும்

 

  • 2008-இல் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாமல் போனது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணி கடைசி இடத்தையே பிடித்தது ஏமாற்றமாக அமைந்தது.

 

 நம்பிக்கை தரும் டீம்

 

  • ஆனால் இந்த முறை ஸ்ரீஜேஷ் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி சற்று வலுவான அணியாக உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும், காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளது. நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சில வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. கேப்டன் ஸ்ரீஜேஷ், உலகத் தரம் வாய்ந்த கோல் கீப்பர் ஆவார். சர்தார் சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

 

 பி பிரிவில்…

 

  • ஒலிம்பிக் போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை ஏ, பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதேபிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

 

 காலிறுதிக்காவது?

 

  • ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதனால் இந்திய அணி நிச்சயம் காலிறுதிக்கு முன்னேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், குரூப் சுற்றில் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளை வென்றாக வேண்டும்.

 

 அயர்லாந்துடன் மோதல்…

 

  • இன்று இரவு30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அயர்லாந்தை சந்திக்கிறது இந்தியா. இம்முறையாவது ஹாக்கி அணி, ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

 

 ஒலிம்பிக்கில் நுழைந்த மகளிர் அணி…

 

  • இந்திய மகளிர் அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணியிடம் இருந்து பதக்கத்தை எதிர்பார்க்க முடியாது.