Confusion For Qualifying Examination 3 Thousand Teachers

தகுதித்தேர்வு குழப்பம்: தமிழகத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் வேலையை இழக்கும் அபாயம்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி மேற்கொள்ள வேண்டுமானால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டு கொண்டு வந்தது.

 

2016-09-21_17-30-36

 

  • இதன் அடிப்படையில் தகுதித் தேர்வும் 3 முறை நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வேலையில் நியமிக்கப்பட்டனர்.

 

  • ஆசிரியர்கள் தகுதித் தேர்வை அரசு உதவி பள்ளியில் பணியாற்றக் கூடியவர்களும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. 2010-ம் ஆகஸ்டு மாதம் 23-ந்தேதிக்கு பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டு இருந்தது.

 

  • இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

  • இந்த நிலையில் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அரசு அளித்த 5 ஆண்டு காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால் தேர்வு எழுத முடியாமல் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது. தகுதித் தேர்வு நடைபெறாமல் இருப்பதாலும் குறிப்பிட்ட காலம் முடிவடைவதாலும் தங்களது ஆசிரியர் பணிக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறார்கள்.

 

  • இதற்கிடையில் தகுதித் தேர்வு தொடர்பாக 2 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன. இதனால்தான் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

  • இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கூறுகையில், தகுதித் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தரவேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.