25 குழந்தைகளுக்கு வீரதீர விருது: பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for 25 children heroic Award : Narendra Modi

 

  • டெல்லியில் நேற்று தேசிய வீரதீர விருதுகளை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி. அருகில் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி.

 

  • வீரதீர செயல்கள் புரிந்த 25 குழந்தைகளுக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேசிய வீரதீர விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

 

  • ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின் போது வீரதீர செயல்கள் புரியும் குழந்தை களுக்கு விருதுகள் வழங்கப்படு வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய வீரதீர செயல்களுக்கான விருதுக் காக தெரிவு செய்யப்பட்ட 25 குழந்தைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

 

  • துன்பத்தில் சிக்கிய மனிதர் களை காப்பாற்றி சாகசம் புரிந்த அந்த குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதாக மத்திய அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • மேலும் அதில் ‘‘சமயோஜித அறிவாற்றல், விரைவாக சிந்திக்கும் திறன், தன்னலமற்ற தொண்டு உணர்வு மற்றும் துன்பத்தில் இருப்போரை காப் பாற்றும் மனோ திடம் ஆகிய முக்கியமான நல் குணங்கள் வீரதீர செயல்கள் புரிந்த இந்த குழந்தைகளிடம் காண்பதாக பிரதமர் தெரிவித்தார். இத் தகைய வீரதீர செயல்கள் விருது கள் பெற்றவுடனேயே முடிவுக்கு வந்துவிடக் கூடாது. வாழ்க்கை முழுவதும் இதை கடைபிடிக்க வேண்டும். சமுதாயத்துக்கான தொண்டுப் பணியை தொடர்ச்சி யாக செய்து தங்களது நல்ல குணங்களை குழந்தைகள் மென் மேலும் வளர்த்துக் கொள்ள வேண் டும் என்றும் பிரதமர் அறி வுறுத்தினார்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது.

 

  • இதைத் தொடர்ந்து குழந்தை கள் நலனுக்கான இந்திய கவுன் சிலின் புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளி யிட்டார். இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]