24 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் ”திறன் இந்தியா திட்டம்” அறிமுகம்

Image result for project manager skills and abilities

 

  • தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி வறுமைக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிறந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை மூலம் வறுமைக்கு எதிரான போரை இந்தியா தொடங்கியுள்ளதாகவும் இந்த போரில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

உலக இளைஞர் திறன் தினம் :

  • உலக இளைஞர் திறன் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டில் புதிய திறன் மேம்பாட்டு பயற்சி இயக்கம் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக, தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலமாக, நாடு முழுவதும் பயற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக, 1,500 கோடி ரூபாய், மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது.

 

24 லட்சம் இளைஞர்கள் பயன்பெறும் திட்டம் :

  • இந்த திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் மட்டும், 24 லட்சம் இளைஞர் பயிற்சி பெற உள்ளனர். 16 வயது முதல், 36 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய இலக்காகும். தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும், 20 ஆயிரம் இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயற்சி அளிக்கப்படுகிறது. திறன் மேம்பாட்டு இயக்கத் திட்டத்தை பிரதமர் திரு. மோடி டெல்லியில் இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திரு. மோடி, இந்திய இளைஞர்கள் கண்ணியமான பெருமைக்குரிய வாழ்க்கையை வாழ விரும்புவதாகக் கூறினார்.

 

இளைஞர்களுக்கு நம்பிக்கை வழங்கும் திட்டம் :

  • ஏழைகளுக்கு வருவாய் வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் பிரதமர் தெரிவித்தார். வரும் காலங்களில் உலகின் வேலை வாய்ப்பு தொடர்பான சிக்கல்களுக்கு இந்தியா தீர்வு சொல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த மோடி, உலக வேலை வாய்ப்புச் சந்தையை பலப்படுத்தி அதற்கேற்ப இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, இன்று தொடங்கப்பட்டுள்ள திறன்மேம்பாட்டு பயிற்சி இயக்கத்தின் மூலம் நாட்டில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.