Education News

பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் விவரம் – செப்.11-க்குள் அனுப்ப உத்தரவு

  • பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதவுள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்களையும் வரும் செப்.11-ஆம் தேதிக்குள் சேகரித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
  • தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
    இது தொடர்பாக அனைத்து மாவட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு தேர்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் வகையில், அவர்களின் விவரங்களைப் பள்ளிகள் சேகரித்து, வரும் 11-ஆம் தேதிக்குள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
  • முதன்மைக் கல்வி அதிகாரிகள் இந்த விவரங்களை சரிபார்த்து, அரசு தேர்வுத் துறை அலுவலகத்துக்கு செப். 13-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
  • கடந்த ஆண்டில், பிளஸ் 1 படித்த அனைத்து மாணவர்களின் விவரங்களும், பிளஸ் 2 தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற வேண்டும். எந்த மாணவரின் பெயரும் விடுபடக் கூடாது. அவர்கள் வேறு பள்ளிக்கு மாறியிருந்தாலும், அவர்களின் விவரங்களை, புதிய பள்ளிகளில் இணைத்து வழங்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker