தமிழக அரசு துறைகளில் 1800 உதவி மருத்துவர் பணிகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

Image result for mrb

 

 

தமிழக அரசு துறைகளில் உதவி மருத்துவர் பணிகளுக்கு 1800 பேர் தேர்வு

 

  • செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-தமிழ்நாடு மருத்துவ சேவைப்பணிகள் ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.), தமிழக அரசு துறைகளில் ஏற்படும் மருத்துவம் தொடர்பான பணியிடங்களை நிரப்பி வருகிறது.தற்போது இந்த அமைப்பு உதவி மருத்துவர் (அசிஸ்டன்ட் சர்ஜன்) பணிகளை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1800 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

 

  • விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி. பி.சி.எம் பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். 1-7-2016-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:

 

  • எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்து மெட்ராஸ் மருத்துவ பதிவு மையத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

 

  • கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகளுடன், தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

 

  • விண்ணப்பதாரர்கள் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ)., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.375 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் வழியிலும், செலான் மூலம் இந்தியன் வங்கி கிளைகளிலும் செலுத்த லாம்.

விண்ணப்பிக்கும் முறை:

 

  • விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 17-10-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 19-10-2016-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். நகல் விண்ணப்பங்கள் 27-10-2016-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இதற்கான தேர்வு 20-11-2016-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங் களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” http://www.mrb.tn.gov.in/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]