பெண்ணடிமை வேண்டாம்!

Deal Score0

சூல்வலி ஏற்றுத்தன் துயர்தனை மாய்த்து
உயிர்அது ஈறாக  மறுபிறப்பு மெடுத்து
திங்கள் பத்தும் சுமந்துனைக்
காத்து
வெளிநீவரக் காத்திருப்பாள் இருவிழி
பூத்து

அடுக்களை யன்றி யவளொன்றும்
கண்டதில்லை
எந்தையும் நுந்தையும் அதைமாறச்
செய்ததில்லை
பிந்தையொரு சரித்திர மொன்றென
இருந்திருங்கால்
நங்கை நாணம் தவிர்த்துலகை ஆளச்
செய்வோம் !!

– செல்வக்குமார் சங்கரநாராயணன்

image