நானும் முதுகுநாணுள்ளவை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நான் எழுதப்படுவதற்காக
காத்திருக்கிறது
மொழிபெயர்ப்பு செய்யப்படாத
உன் மெளனங்கள்!

முணுமுணுக்கும் இதழ்கள் சொட்டும்
வார்த்தைகளை நீ ஒளித்துக் கொண்டு
என் இதயத்தைக் கொஞ்சம்
பாடாய்ப்படுத்துகிறாய்

வகைப்பாட்டியலின் பட்டியலில்
இன்றளவும் நீயொரு அற்புத உயிரியென
காதலுலகத்தில் மிளிர்கிறாய்!!

ஐந்துலகத்தையும் தாண்டி
ஆறாவதில் லயித்துக்கொண்டிருக்கும்
நீ படைக்கப்பட்டது எவ்வுலகத்தில்!

இறக்கையில்லாத காரணமோ!
இல்லை தேவலோக விதிமீறலோ!
நான் மட்டும் இன்றளவும்
உழல்கிறேன் அன்பே
முதுகுநாணுள்ளவைகளில்
தரையில் புரண்டு கொண்டு .

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image