தூக்கம் வரலையா?

Deal Score0

தூக்கம் வரலையா?!

சரியான தூக்கம் என்பது 7-8 மணி நேரம். ஆனால் இப்பொழுது அது எத்தனை பேருக்கு கிடைக்குதுன்னு தெரியல. தூங்குறதே ஒரு சிறந்த தியான நிலை மாதிரிதான். ஆனால் இப்ப தூக்கம் வர்றதுக்கே மெடிட்டேசன் செய்ய வேண்டிய நிலைல இருக்கோம் .

இந்த ஸ்மார்ட் போன், டேப்லெட், லேப்டாப் வந்ததுல இருந்து நிம்மதியாத் தூங்குற நேரம் போச்சு அப்டின்னு நாம சொல்லிட்டு இருக்கது என்னவோ வாஸ்தவம்தான்.

சாட்டிங்,லவ்விங்,நட்பிங், அன்பைப் பொழியிங் இதனாலதான் நாம தூங்காம இருக்குறதா நாம நினைச்சுட்டு இருப்போம். பட் இது உண்மைதான், அடுத்த பாதி உண்மைய என்னன்னு பாக்கலாம்.

நம்ம மொபைல் , கம்பியூட்டர் ல நமக்கு அதிகம் வர்ற வெளிச்சம் என்னன்னா நீலக் கலர் லைட்டுதான்.இந்தநீலக்கலர் லைட் நம்ம கண்ணுல இருக்க சிலியரித்தசை ல பட்டு நம்ம தூங்கவிடாமப் பண்றதுல ஒரு பெரும்பங்காக இருக்குது.

அது எப்டின்னா, கண்ணில் இருக்க மெலொனோஸ்பினின் உணர் நரம்பு நம்ம அதிகமா மொபைலோ, கம்பியூட்டரோ யூஸ் பண்றப்போ அந்த உணர் உறுப்பை ரொம்ப ஆக்ட்டிவா வச்சுருக்கும். அப்டி வச்சுருக்கதால மூளையால மெலெட்டோனின் அதிகம் சுரக்க முடியாது.

இந்த மெலெட்டோனின் எதுக்கு உபயோகம் ஆகுதுன்னா இது தான் நம்மளத் தூக்கத்துல ஆழ்த்துது.
நாம Night Mode ல மொபைல மாத்துனாலும் brightness குறையுமே ஒழிய நீலக்கலர் மாறாது.

இதைச் சரி பண்ணாலே பழைய மாதிரி பத்து மணிக்குத் தூங்குன காலத்தை மீட்டெடுத்துடலாம்.
போன் உபயோகிறவங்க twilight, blue light reducer அப்டின்னு இருக்க அப்ளிக்கேசனை இன்ஸ்டால் பண்ணிட்டா போதும் .அது ஆட்டோமேட்டிக்கா நீல ஒளியை இரவில் குறைத்துவிடும் திறன் கொண்டது.

twilight link:
https://play.google.com/store/apps/details?id=com.urbandroid.lux இது மாதிரி நெறய play store ல இருக்கு.

இதே மாதிரி கணினிக்கு f.lux செயலியை ஐ புரொகிராம் செய்து வைத்துக்கொண்டால் இரவு சரியான நேரத்திற்கு தூக்கம் தூண்டப்படுவதை உங்கள் சாதனங்களால் தடுக்கமுடியாது.
(அதை ஆஃப் பண்ணிட்டா பிரச்சனை ஓவர்.பட் நாமதான் அதைச் செய்றதில்லயே! )

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image