குளிரடிக்கும் வெயில் கீற்று!

Deal Score0

குளிரடிக்கும் வெயில் கீற்றை 
என் மார்பிலே பரவச்செய்கிறாய்!

ஸ்பரிசத்தின் மகரந்தங்களை 
என்னுள் தூவிச் செல்கிறாய்!

கருவிழியை என் புறமாய்ச் சாய்த்தே
எனை மயிர்கூச்செறியச் செய்கிறாய்!

வேதங்களாய் முணுமுணுக்கும் உன் பெயரினூடே திகட்டாத புதிதொரு இனிப்பைப் பரவச் செய்கிறாய்!

சத்தமில்லா முத்தமிடும் கைவிரல்
கோர்க்கும் நேரங்களில் எல்லாம் 
சுகந்தத்தைச் சுவைக்க வைக்கிறாய்!

இதழோரக் குறுஞ்சிரிப்பை உருவாக்கி
என் இதயத்தை இழுத்துச்சென்றுவிட்டாய்!

உனக்காகத் துடித்தது இப்பொழுது
உன்னுடனே துடிக்கிறது..

வைத்திரு; அதை வாங்கிக்கொள்கிறேன் 
மீண்டுமொரு குளிரடிக்கும் வெயில் கீற்றை உணரும் பொழுது!

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image