காலச்சுவடு - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

காலச்சுவடு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நீரூற்றி அழிக்க நீ
கடற்கரை சுவடுகளில்லை
இதயத்தில் இருக்கிறது
உன் காலடிச் சுவடுகள்

பதித்த உன் அழுத்தங்கள்
சொல்லும் நம் பந்தத்தை!
முடிந்தால் கேட்டுப்பார்
உன் அந்த வருகையிடம்

உனக்குத் தெரியும் என்பது
எனக்கும் தெரியும் அன்பே!
இருந்தும் புரியவில்லை ஏன்
உனக்குப் புரியவில்லை என்று

இப்படி இருந்திருக்கலாம்
என்பதாய் நீ
இப்படியே இறந்துவிடலாம்
என்பதாய் நான்..

என் மனத்துகிலுரிக்கும் நின்
மெளனத்தை யாரிடமேனும்
கொட்டித் தீர்த்துவிடு அன்பே

விரும்பவில்லை நான்
என் மனம் அரித்துக் கிடப்பதைப்
போல
உன் மனமும் அரித்து விட..

– செல்வக்குமார் சங்கரநாராயணன்

image