காதல் சாயம்

Deal Score0

உனை வரிகளால்
வரைந்துகொண்டிருக்கிறேன்..
அதை சிலர் காதலென்கிறார்கள்!

உனை என் கண்ணீரால்
நிரப்பிக்கொண்டிருக்கின்றேன்.. 
அதை சிலர் தேடலென்கிறார்கள்!

எதுவும் உனைப் பற்றிச்
செய்யாமல் இருந்துபார்த்தேன்..
அதை சிலர்  பிரிவென்கிறார்கள்!

இன்னமும் நம்மிருவரின்
உடல் பிரிவை
ஆராய்ச்சி செய்யும் இவர்களுக்குப்
புரியாது அது
வெறும் வார்த்தைகளில் உச்சரிக்கும் காதல் இல்லையென்று!

அவர்களுக்குத் தெரியாது போலவே
எப்பொழுதோ நீயும் நானும்
இரண்டறக்கலந்து இரண்டாம் உலகத்தில் குடியேறிவிட்டோமென்று!!

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image