காதலில் விழுங்கள்

Review Score0

இரவு பகலாகும் முழித்திருக்க!
பகலும் இரவாகும் துயில்முறிக்க!

திட்டும் அன்னை வாசகமெலாம்
திரைப்பட வசனமாய் மாறும்
தட்டிக் கேட்கும் தந்தையின் மேல்
தானக ஒரு பாசம் வளரும்

உடன் பிறந்த தம்பி தங்கைகளை
கரைசேர்க்க சிந்திப்பாய் – உன்
காதல் கரைசேரும் நாளது முன்

வருங்கால மனைவியை இப்பொழுதே கண்டிப்பாய்
வரும் போகும் நேரத்தை நீ
அப்படியே குறைப்பாய்

பொறுப்புகள் பொங்கி வர
புதைந்து அமிழ்ந்து அதிலே
நீயோர் தீட்டப்பட்ட வைரமாவாய்

இல்லையேல்
இவையாவுமின்றி ஆணெனில்
நீ தாடி  வளர்க்க நேரிடலாம்!
பெண்ணென்றால் தலையணை மட்டும்  நனைக்கவும் !!

இவ்வளவே.

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image