அந்த இன்பம்

Review Score0

அதில் என்னதான் இருக்கின்றதென்று இன்றளவும்
தெரியவில்லை எனக்கு; ஒவ்வொரு முறை அனுபவிக்கும் பொழுதும்

அப்படி ஒன்றும் அது பெரிதில்லைதான் ; இருந்தும் ஒரு
மன நிறைவை அளித்தது அவள் அப்படிச் செய்வது

கட்டியணைத்து இதழுக்கு இதழ்
பதித்திருந்தால் கூட அந்த இன்பத்தில் அணுவளவுதான் அது

ஒரு மின்சாரத்தூண்டலை ஆனந்தமாக
அப்படியே ஏற்று உடலுக்குள் ஏற்றி 
உச்சந்தலை சுற்றி சொக்குவதானது அது

பசியை மாய்த்து இன்பக் கடலில் தூய்த்து மனதை கிளரச் செய்யும் காமத்திற்கெல்லாம் அது அப்பாற்பட்டது தான்

அது என் பெருமூச்சை உருக்கி மனதிற்குள் வார்த்தைகளை அழுத்தி 
மார்பு விம்ம உள்ளொளியை ஊற்றி
இன்பத்தில் திக்குமுக்காடச்செய்கிறது.

அந்த இன்பம்..
என் பெயரை அவளும்
அவள் பெயரை நானும் 
சொல்லப்படும் பொழுதுகள்!!!

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image