அதன் பெயர்?

ஒரு தேடலில் கிடைத்துவிடுவதற்கு
அது அற்பமும் அல்ல 
ஓராயிரம் தேடலில் கிடைப்பதற்கு
அது அரிய அற்புதமும் அல்ல

இவற்றிற்கெல்லாம் மகோன்னதமாய்
இன்னும் விளக்கப்படாத அருவமாய்
உங்கள் அருகிலேயே சுற்றித்திரிகிறது அது

விளக்கங்கள் தேவையில்லை தான் 
கொஞ்சம் இதயத்தே உணர்ச்சியும்
வலி அனுபவிக்கத் திராணியிருந்தால்
போதும் அதைச் சுவைப்பதற்கு

எப்பொழுதேனும் சுகமும்
எப்பொழுதும் வலியும் 
தாங்க முடியுமென்றால் 
தாராளமாய் தகுதியுள்ளது -அதை நீங்கள் தெரிந்துகொள்வதற்கு..

அதற்கு காதல் என்று பெயர்!

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image

No Comments

Sorry, the comment form is closed at this time.